திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை அமைக்கப்பட்டதை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

Update: 2021-12-01 14:51 GMT
திருச்சி குடமுருட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகை மழைநீர் உறையூர் பாத்திமா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.இதனால் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் குடமுருட்டி ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக பாத்திமா நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Tags:    

Similar News