திருச்சி கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் கோளரங்கத்தை சூழ்ந்தது மழைநீர்

திருச்சி கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் கோளரங்கத்தை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

Update: 2021-11-21 09:00 GMT

திருச்சி கோளரங்கம் (பைல் படம்)

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு குளத்தின் அருகே அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் உள்ளது. இங்கு ஒரு காணொலி காட்சிக்கூடம், ஒரு அரங்கம், அறிவியல் பொருட்கள், காட்சிக்கூடம், அறிவியல் பூங்கா, மூலிகை பூங்கா, டைகர் மற்றும் டைனோசர் பார்க் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக குளவாய்ப்பட்டி, உடையான்பட்டி, கே.கே.நகர், காஜாமலை போன்ற பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் கொட்டப்பட்டு பெரிய குளத்திற்கு நீர் அதிகரித்துள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக குளத்தின் ஓரத்தில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் கோளரங்கத்தை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால், கடந்த 2 நாட்களாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. தண்ணீர் வருவது அதிகரித்தால் பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மற்றும் காட்சிப்பொருட்கள், கருவிகள் பாதிக்கப்படும்.

எனவே கோளரங்கத்தை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவியலாளர்களும், கோளரங்க பணியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News