காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை கண்டித்து ஏ.பி.வி.பி. ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருச்சியில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-10-13 12:00 GMT

காஷ்மீரில் அப்பாவிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து ஏ.பி.வி.பி. அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், தாக்குதல் சம்பவத்தால் அப்பாவி ஆசிரிய பெருமக்கள், ராணுவவீரர்கள் என பல்வேறு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டித்து  ஏ.பி.வி.பி.தேசிய மாணவர் அமைப்பு சார்பாக  இன்று மாலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் தலைமை தாங்கினார்.

தென்தமிழக மாநில இணை சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின், திருச்சி மாநகர இணை செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News