திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார் தாயார்.
திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோயிலாகும். ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இக்கோவிலிலும் நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது. பகல்பத்து முடிந்து இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது தாயார் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.