திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.நியமனம்
திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2022 திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரியான கலைச்செல்வி மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கைபேசி எண்: 7402607587
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், புகார்கள் ஏதும் இருந்தால், பொதுமக்கள் மேலே உள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சு.சிவராசு தெரிவித்துள்ளார்.