திருச்சி அருணாசலம் மன்றத்தில் மீண்டும் இடம் பெற்றது கக்கன்ஜி படம்
திருச்சி அருணாசலம் மன்றத்தில் கக்கன்ஜி படம் வைக்கப்பட்டதால் காங்கிரசார் இனிப்பு வழங்கினர்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகி கக்கன்ஜி முழு உருவ படம் திடீரென அகற்றப்பட்டது. இதனை கண்டித்தும் உருவப் படத்தினை மீண்டும் இன்று காலை 10 மணிக்குள் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் படத்தை வைக்க வேண்டும் இல்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் மாவட்ட கமிட்டியில் கக்கன்ஜி படம் மீண்டும் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தியாகி கக்கன்ஜி படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் மலைக்கோட்டை முரளி கள்ளத்தெரு குமார், ஜி .எம். ஜி. மகேந்திரன் கீர கொல்லை சக்கரபாணி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஒன்றிய கவுன்சிலர் நாச்சிகுறிச்சி அருண்பிரசாத், ஆனந்தி,எஸ்.சி. எஸ்.டி.பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் குமார், மாவட்ட செயலாளர் ஜீவா நகர் மாரிமுத்து, கலைப்பிரிவு ஸ்ரீ ராகவேந்திரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரபீக் மகளிர் அணி அஞ்சு பிரியங்கா காந்தி பட்டேல் வார்டு தலைவர் வெல்லமண்டி பாலசுப்பிரமணியன் சம்சுதீன் ராஜீவ் காந்தி அதவத்தூர் வேலாயுதம் முகிலன் அரியாவூர் பால் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.