திருச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்- கலெக்டர் சிவராசு அழைப்பு

திருச்சியில் நாளை நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2021-10-28 05:33 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2,பட்டப்படிப்பு மற்றும் தொழில் பயிற்சி(டர்னர், வெல்டர், பிட்டர்) முடித்த அனைவரும் (வயது வரம்பு 18-க்குமேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்துகல்வி சான்றிதழ்களின் நகல்,பயோடேட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் போட்டோக்களுடன் கலந்துகொள்ள வேண்டும். தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறவிரும்பும் இளைஞர்கள் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்திற்குநேரில் வர வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News