ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுடலையாண்டி பேசினார்.
திருச்சி காஜாமலை அருகில் உள்ள ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நேற்று பூங்கா அருகில் உள்ள சிட்டி ஹார்வெஸ்ட் சர்ச் அசம்ப்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைமை ஆலோசகரும், தமிழ்நாடு மின்வாரியத்தின் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளருமான கண்ணன் முன்னிலை வகித்தார். சங்க துணை தலைவர் பொன்னுசாமி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிலம் கையகப்படுத்தும் பிரிவு சிறப்பு அதிகாரியுமான எஸ். சுடலையாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் தனது சிறப்புரையில் தனி மனிதனாக இருந்து சாதிப்பது கடினம். சங்க நடவடிக்கைகள் மூலம் சமூகத்திற்கும் மக்களுக்கும் தேவையான அனைத்தையும் சாதித்துக்கொள்ள முடியும். நான் சுமார் 40 ஆண்டுகாலம் சங்க நடவடிக்கைகளில் இருந்ததால் எனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த கருத்தை உங்களுக்கு பதிவிடுகிறேன். இதுபோன்ற மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சங்க நடவடிக்கைகள் மூலமாகவே சாலை, மின் விளக்கு, குடிநீர், மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை பெற முடியும். அதற்கு முன்னோடியாக இந்த பதிவு பெற்ற சங்கம் செயல்படுவதை பொதுக்குழு நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொண்டேன். இந்த மக்கள் நல சங்கம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
முன்னதாக சங்க உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கேள்விகளுக்கு தலைவர் பதில் அளித்தார்.
கூட்டத்தில் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை கட்டுவதற்கு பன்னிரண்டரை லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு நன்றி தெரிவிப்பது, ஜே. கே. நகர் விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற தெருக்களில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி 61- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, மேலும் விரைவில் ரேஷன் கடை கட்டுவற்கான பூர்வாங்க பணிகளை மாநகராட்சி அதிகாரிகளின் வழிகாட்டுவதல் படி மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள்.
சங்கத்தின் செயலாளர் சங்கர் ஆண்டறிக்கை தாக்கல் செய்தார் .சங்க தலைவர் திருஞானம் பொருளாளர் சார்பில் வரவு செலவு அறிக்கை மற்றும் எதிர்காலத் திட்ட பணிகள், ஓராண்டு காலத்தில் நிறைவுற்ற பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் ரெக்ஸ் குலோத்துங்கன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.