திருச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா
திருச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மலைக்கோட்டை முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பூக்கடை பன்னீர், கள்ளிக்குடி குமார், செந்தில்குமார், ஜெகதீஸ்வரி, அப்துல் குத்தூஸ், நிர்மல்குமார், ராஜீவ்காந்தி இளைஞர் காங்கிரஸ் ஸ்ரீராகவேந்திரா, முகமது ரபி, ஹரிஹரன், மாரியப்பன், வக்கீல் கோகுல், கோகிலா, சம்சுதீன், சண்முகம், இஸ்மாயில் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.