திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் ஜூன் 18ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

திருச்சி மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் ஜூன் 18ம் தேதி ஜமாபந்தி துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-13 18:00 GMT

பைல் படம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1433-ஆம் பசலி ஆண்டிற்கான (2023-2024) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், 18.06.2024 முதல் தொடங்கி 27.06.2024 வரை நடைபெற உள்ளது.

அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் முசிறி வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி தலைமையில் திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம்  தலைமையில் மருங்காபுரி வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் இலால்குடி  தலைமையில் இலால்குடி வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் முசிறி  தலைமையில் தொட்டியம் வட்டத்திலும், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருச்சிராப்பள்ளி  தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திலும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் திருச்சிராப்பள்ளி தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டத்திலும், உதவி ஆணையர் (கலால்) திருச்சிராப்பள்ளி  தலைமையில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டத்திலும், தனித் துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) திருச்சிராப்பள்ளி  தலைமையில் துறையூர் வட்டத்திலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News