திருச்சி மத்திய சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Update: 2021-12-17 07:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, வார்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராம்குமார் எறும்பு மருந்து (விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், தற்போது, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News