திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம்
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஆகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும் பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டனர்.
இது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டம் மற்றும் தேர்தல் ஆணைய முடிவுகளில் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெற்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்பின்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது பதவி வகித்து வருகிறார்.
கட்சி பிளவுபட்டபோது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆக இருந்த வெல்ல மண்டி நடராஜன் ஓ.பி.எஸ். அணி பக்கம் இருப்பதால் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி நீண்ட காலமாக காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆக அ.தி.மு.க.எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளராக இருந்து வரும் ஜெ.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெ. சீனிவாசன் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஆகவும் நான்கு முறை மாநகராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துடிப்பான இளைஞரான இவர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை செயலாளர் உட்பட்ட பல பதவிகளை வகித்து உள்ளார். கட்சியில் ஏற்பட்ட பிளவின்போது இவர் டி.டி.வி. தினகரன் பக்கம் சென்றிருந்தாலும் பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் காரணமாக அவருக்கு தற்போது மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.