திருச்சி மத்திய சிறை வாசலில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மத்திய சிறை வாசலில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைபட்டு கிடக்கும் இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மத்திய சிறை வாசல் முன் இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாகீர் தலைமை தாங்கினார். ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், வழக்கறிஞர் கமருதீன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.