ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி துவக்கம்

ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி துவங்கி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-16 11:48 GMT

விழாவல் கவுரவிக்கப்பட்ட நாட்டு நலப்பணிதிட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா.

திருச்சியில் இறகுகள் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது. 

இந்த புதிய அமைப்பினை பாரதிதாசன் பல்கலைக்கழகமுன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா,  காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியை டாக்டர் நிலா , திமுக பகுதி செயலாளர் ராம்குமார், பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரவி, ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆங்கிலத்துறை, டாக்டர் அருண் பிரகாஷ் , பிரபாகரன், டிசைனர் துரை, இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய மெர்சி ஆகியோரைக் கொண்டு தொடங்கப்பட்டது.

இந்த அகாடமின் முக்கிய நோக்கம் தாய் அல்லது தந்தையை இழந்த  எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு மற்றும் அரசு பணித்துறைக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை தரமான ஆசிரியர்களை கொண்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News