தனியார் நிறுவனத்திற்கு எதிராக திருச்சியில் முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

மோசடி தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிராக திருச்சியில் முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-08-25 12:48 GMT

திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ராஹத் என்கிற தனியார் நிறுவனம். இந்த  நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சுமார் ரூ. 1000 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும் அதற்கு பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்  அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News