திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2023-06-26 16:56 GMT

திருச்சியில் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த பேரணி துவக்கி வைக்கப்பட்டது.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி இணைந்த கைகள், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம், பத்து ரூபாய் இயக்கம், பன்னாட்டு சமூக தன்னார்வ செயல்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களுடன் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதியை ஏற்பு நிகழ்வும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினையையும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வன் துவக்கி வைத்தார். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் கனகமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக, சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து சட்டவிரோதமான போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வினை ஜுன் 26-ம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை  முன்னிட்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள்  மற்றும் துண்டு பிரசுரங்களை  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு சிந்தாமணி அண்ணா சிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் இந்திரா காந்தி மகளிர் கல்லூரி முன்பு வரை பேரணி நடைபெற்றது.


விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பத்மாவதி வசந்தி ராஜலக்ஷ்மி வினோதா பவித்ரா வடிவுக்கரசி போதை ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பேரணியில் பங்கேற்றார்கள். புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெர்லின் கோகிலா குழந்தை பெரியார் நுகர்வோர் கழகம் ஒருங்கிணைப்பாளர்கள் வித்யா ஜனனி போதை ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் ரேவதி தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று துண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் வழங்கினர்.

விழிப்புணர்வு நிகழ்வில் இணைந்த கைகள் நிறுவனர் பிரேம்குமார், ஸ்ரீரங்கம் நல சங்க மிலிட்டரி நடராஜன், மோகன்ராம், பன்னாட்டு சமூக தன்னார்வ செயல்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை யோகா ஆசிரியர் விஜயகுமார், தமிழ் குரல் அறக்கட்டளை தங்கமணி, மூத்த சமூகப் பணியாளர் கோவிந்தசாமி, முனைவர் நவீன் மணி, மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு சங்கம் செல்வராஜ், லிவிங்டன்தாஸ்,

பத்து ரூபாய் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் சேட்டு, சாலை பயனீட்டாளர் நல அமைப்பு அய்யாரப்பன், நுகர்வோர் பாதுகாப்பு & குடிமக்கள் நலச்சங்கம் கோவிந்தராஜ், ஸ்ரீனிவாச பிரசாத், சீனிவாசன்,முத்துசெல்வி உட்பட பல சமூக சேவை அமைப்பு தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அசீம் பேரணி நிறைவில் பேசுகையில், போதை பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ, உபயோகிப்பதோ, சட்டப்படி குற்றமாகும். குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் உண்டு. கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வழங்கி உள்ளது என்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா பங்கேற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News