திருச்சியில் நூதன முறையில் நடைபெறும் பண மோசடி: மக்களே உஷார்
திருச்சியில் நூதன முறையில் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பா மக்கள் உஷாராக இருக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ஜெ.ஜெ.நகர்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவருக்கு ஆன்லைன் பிசினஸ் என்றபெயரில்முன், பின் தெரியாத செல்போன் நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது.இதனை தொடர்ந்து அந்த நம்பரை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட விக்னேஷ் இது குறித்துகேட்டபோது குறிப்பிட்ட ஒருதொகையை டெபாசிட் செய்தால் சிறிது நாட்களில் இரட்டிப்பு, பிளஸ் வட்டியுடன் பணம் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உண்மை என்று நம்பிய அவர் முதல் முறையாக ரூ.200-ஐ டெபாசிட் செய்துள்ளார்.சிலநாட்களிலேயே அவருக்கு ரூ.420 திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். இவ்வாறாக ஒரு கட்டத்தில் அவர் ரூ. 92ஆயிரத்து 700-ஐ அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட செல்போன் நம்பரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் மோசடிசெய்யப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து மோசடி ஆசாமி குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதே போல,திருச்சி கீழ அம்பிகாபுரம் லூயிஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 65). இவரின்செல்போனுக்கு தொடர்பு கொண்டஒருவர், ஸ்டேட் பேங்க் ஊழியர் பேசுவதாக கூறி அவருடைய டெபிட்கார்டு, ஏ.டி.எம். கார்டு நம்பர்களை கேட்டுள்ளார். இதனை நம்பிய குணசேகரன் அவர் கேட்ட அனைத்தையும் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து குணசீலனின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.1லட்சத்து 86 ஆயிரத்து 888மாயமாகி உள்ளது. இதனால்அதிர்ச்சி அடைந்த குணசீலன் இது குறித்து திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசாரிடம் புகார்கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.