திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இனிகோ இருதயராஜ் உள்ளார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சாலை அமைக்கும்பணிகள், மழை நீர் வடிகால் மற்றும் வளர்ச்சி திட்டபணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
அவ்வகையில் திருச்சி மாநகராட்சி 59வது வார்டு கல்லுக்குழி, கள்ளர் தெரு,செங்குளம் காலனி,காஜா நகர் போக்குவரத்து அரசு கிளை அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் மேல் தொட்டி அமைத்து தருமாறும் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடித்து தருமாறும் அப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மழை காலங்களில் தெருக்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்தனர். அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுடன் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர் கீதா,வட்டச் செயலாளர் கணேசன் மூர்த்தி கோவிந்தராஜ் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் சென்றிருந்தனர்.