மின் கட்டண உயர்வு கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-09-12 11:53 GMT

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி ஜங்ஷன் பகுதி குழு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பகுதி செயலாளர் ரபீக் அகமத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல, கடந்த காலத்தில் நிர்வாக தன்மையும் தனியாரிடம் கூடுதல் கட்டணத்திற்கு மின்சாரத்தை வாங்கியதுமே காரணம் மேலும் சொந்த மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் இந்த சுமையை பொதுமக்கள் வியாபாரிகள் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் தலையில் சுமத்துவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ரேணுகா மற்றும் வள்ளி ஆகியோர் சிறப்பு கண்டன உரையாற்றினர். மேலும் கணேசன், அப்துல் கரீம் , ஷேக் மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News