திருச்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கோ.பாலமுருகன் குலையுணன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது 12-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக வீடு, வீடாக சென்று மக்களிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு அனைத்து மக்களும் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தனது 15 வருட கால அரசியல் அனுபவத்தின் மூலமும், விறுவிறுப்பான பிரச்சாரம் மூலமும் பாலமுருகன் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை காவேரி நகர், கீழ சிந்தாமணி, பழைய கரூர் ரோடு பகுதியிலும், இன்று வி.என்.நகர் பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தென்னைமரம் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பாலமுருகன் பொதுமக்களிடம் பேசுகையில், இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி, உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் விரைந்து செயல்படுத்தி தருவேன். மக்கள் தேவைகளுக்காக எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
அரசு சார்ந்த பல்வேறு சலுகைகளை இப்பகுதி மக்களுக்கு வழங்கிட வாக்காளர்களாகிய நீங்கள் தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் மஞ்சள் படை அணியினர் பலர் உடனிருந்தனர்.