திருச்சி சுயேட்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
திருச்சி மாநகராட்சி மலைக்கோட்டை பகுதி 12-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக கோ. பாலமுருகன் போட்டியிடுகிறார். அவர் கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் வார்டுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக நேரில் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது பெரும்பாலானோர் பாலமுருகனுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதியன்று சுயேட்சைகளின் சின்னமான "குலையுடன் கூடிய தென்னை மரம்" சின்னம் கிடைத்தது. இதையடுத்து தனது சின்னமான தென்னைமரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வீடு, வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த வார்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடி உடனடியாக பெற்று தருவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை 12-வது வார்டுக்குட்பட்ட சஞ்சய் காந்தி நகர், ஆர்.கே.நகர், பழைய கரூர் ரோடு, நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், இன்று கீழசிந்தாமணி, இந்திராநகர், கோரி மேட்டுத்தெரு, திரௌபதியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் பாலமுருகன் வீடு, வீடாக சென்று தென்னைமரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டுப்பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் கவுன்சிலர் முருகேசன், கந்தன், VKN சுரேஷ், G.சிவா, மோகன் உள்ளிட்ட மஞ்சள் துண்டு அணிந்த படை நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.