திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.;
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கோ. பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாலமுருகன் இன்று வரை பம்பரமாக தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பாலமுருகன் ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த15 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருந்து வருகிறார். மேலும் ஏற்கனவே அந்த வட்டத்திற்கு தி.மு.க. வட்ட செயலாளராக இருந்தவர். தி.மு.க.வின் முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
ஏரியாவில் நடைபெறும் நல்லது, கெட்டது அனைத்திலும் கலந்து கொண்டு, யாருக்கு என்ன உதவி கேட்டாலும் தன்னால் இயன்றதை செய்தும், இயலாததை யாரிடமாவது கேட்டு பெற்று கொடுத்து மகிழ்ந்து வருகிறார்.இதனால் பாலமுருகனுக்கு 12-வது வார்டில் நல்ல மக்கள் செல்வாக்கு உள்ளது என பலரும் கூறுகின்றனர்.
அவருக்கு வாக்களிக்க வார்டு மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று பாலமுருகனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது குடமுருட்டி கண்ணன், பஜார் மைதீன், மைதீன், சாகுல், கந்தன், பெரோஸ், உள்ளிட்ட அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.