திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த சுதந்திர தினவிழா

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-08-15 11:30 GMT

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000 , ரூ.5,000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்லூரி கட்டணமாக 17 நபர்களுக்கு சிறப்பு தொகை தாலா ரூபாய் 20,000 ரொக்கம் தொகை வழங்கினார்.விழாவிற்கு  மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த 46 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்¦கி , பின்னர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு (2023 - 2024 ஆம் கல்வி ஆண்டு) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு சிறப்புத் தொகை முறையே ரூ.10,000, ரூ.7,000 , ரூ.5,000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மேயர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு முதலமைச்சர் விருது மற்றும் முதல் பரிசுத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மேயர் மு. அன்பழகனிடம் ஏற்கனவே  வழங்கி இருந்தார்.

அத்தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது அந்த டெபாசிட்டில் வரக்கூடிய வட்டி தொகையை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்லூரி கல்லவியினை ஊக்குவிக்கும் விதமாக கல்வி கட்டணத்தை வழங்குவதாக  மேயர் அறிவித்தார்.

அந்த வகையில் இன்று(15.08.2024) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சுதந்திர தின விழாவில்  மேயர் மு.அன்பழகன்  தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்லூரி கட்டணமாக 17 நபர்களுக்கு சிறப்பு தொகை ஒரு நபர் வீதம் ரூபாய் 20,000 ரொக்கம் தொகை மேயர் மு. அன்பழகன்  வழங்கினார்.


மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய உதவிஆணையர்கள், மருத்துவர்கள், உதவிசெயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளிட்ட 32நபர்களை கௌவுரவித்து சுழல் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பின்னர் சிறப்பாக குடிநீர் விநியோகம் இயக்குதல் மற்றம் பராமரிப்பு பணியினை செய்து வரும் ஏஎஸ் பவர் சொலுசன் நிறுவனத்தின் உரிமையாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பாக சமூக சேவை புரிந்துவரும் பிளட் ஷாம், புதுவாழ்வு சமூக அறக்கட்டளை அமைப்புக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் அன்பழகன்  வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலைநிகழ்ச்களில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தைஅருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத்தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணான், ஜெயநிர்மலா, துணை ஆணையர்.பாலு, நகர்நலஅலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன்,செல்வரரஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவிஆணையர்கள் உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News