திருச்சி ஜே.கே.நகரில் முழுமை பெறாத மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி

Drainage Work- திருச்சி ஜே.கே.நகரில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி முழுமை பெறாமல் அரைகுறையாக நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.;

Update: 2022-07-20 08:18 GMT

திருச்சி ஜே.கே.நகரில் அரைகுறையாக தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்.

Drainage Work- திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 61 -வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். குடியிருப்பு பகுதி. ஜே.கே. நகர் மெயின் ரோடு கே. கே. நகர், காஜாமலை பகுதி மற்றும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் விமான நிலையத்தை இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மழைக்காலங்களில் செல்வது உண்டு. இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் உத்தரவின் படி வாய்க்கால் தூர் வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆனால் தூர்வாரும் பணியானது முழு அளவில் நடைபெறவில்லை. பெயர் அளவிற்கு தான் வாய்க்காலில் உள்ள சாக்கடை மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு அடி ஆழத்திற்கு மணல் உள்ளது. அவற்றையும் அப்புறப்படுத்தினால் தான் கால்வாய் துவாரும் பணி முழுமை பெறும். அப்படி செய்தால் தான் மழை நீரும் தேங்காமல் செல்லும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News