மனநல பாட திட்டத்தை சேர்க்க திருச்சி டாக்டர் முதல்வருக்கு கோரிக்கை

Request to Trichy Chief Minister to include mental health course

Update: 2021-10-10 04:35 GMT

டாக்டர் எம்.ஏ. அலீம்

இன்று அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மனநல தினத்தையொட்டி திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், திருச்சி பிரபல மூளை நரம்பியல் துறை நிபுணருமான டாக்டர் எம்‌.ஏ.தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு இணையதளம் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலக மனநல தினம் கடைபிடிக்கப்படும் இந்நாளில் தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலையை தடுக்கும் விதமாக தமிழக அரசு பள்ளி பாடப்புத்தகங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பாடத்தை சேர்க்க வேண்டும். சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக மாணவ- மாணவிகள் தற்கொலை அதிகரித்து வரும் இச்சூழலில் அதனை தடுக்க இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து மேல்நிலை கல்வி பாடத் திட்டத்தில் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பாடத்தை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News