திருச்சியில் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவக்கம்

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவங்கப்பட்டது.

Update: 2021-10-10 16:15 GMT

வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவங்கப்பட்டது. இதில் விக்ரமராஜா பேசுகிறார். அருகில் கோவிந்தராஜூலு

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் துவக்க விழா நடந்தது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

சங்க கொடியை வெங்காய தரகு மண்டியின் தலைவர் வெள்ளையப்பன் ஏற்றி வைத்தா,ர். பொருளாளர் தங்கராஜ் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த மண்டல தலைவர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரையும் மாநிலத் துணைத் தலைவரும் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான கந்தன் வரவேற்றார். 

மாவட்ட தலைவர் ஸ்ரீதர், நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் நகை அடகு பிடிப்போர் நிர்வாகிகள் பெயரை அறிவித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய வணிகர் சங்கத்தின் தேசிய முதன்மை துணைத் தலைவர் விக்ரமராஜா சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் நகை அடகு பிடிக்கும் தொழில் செய்வோருக்கு உரிமம் புதுப்பித்தலின் போது தேவையற்ற கால தாமதம் செய்வதை தவிர்க்க கலெக்டர்  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அழைத்து வந்து நகை அடகு பிடிக்கும் தொழில் செய்வோரை அச்சுறுத்தும் போக்கை காவல்துறையினர் உடனடியாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் பேரமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில் பாலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News