திருச்சி அருகே ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் துவக்கி வைப்பு

Agriculture Farming Project -திருச்சி அருகே ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

Update: 2022-09-14 04:28 GMT
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

Agriculture Farming Project -திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த பண்ணைகளில் மாடு ஆடு வளர்த்தல், காய்கறி பயிரிடுதல், நாட்டுக்கோழி வளர்த்தல், தேனீ வளர்த்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், மீன் வளர்த்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இந்த பணியை நேற்று தமிழக நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணி, மணிகண்டம் ஒன்றிய தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சி தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News