திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் பற்றிய கண்காட்சி துவக்கம்

திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் பற்றிய கண்காட்சியை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

Update: 2022-09-16 15:35 GMT

திருச்சி மாநகராட்சி மைய அலுவலக பூங்காவில் கண்காட்சியை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகரத்தை மேம்படுத்த, திருச்சி மாநகராட்சி எடுக்கும் முயற்சிகள் மற்றும் அதன் செயல்பாடுகளின் கண்காட்சி, புதிதாக சீரமைக்கப்பட்ட மாநகராட்சி மைய அலுவலக பூங்காவில், செப்டம்பர் 16,17மற்றும்18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளதை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு  திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் ஜி. திவ்யா. மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி மாநகரத்தை மேம்படுத்த, திருச்சி மாநகராட்சி எடுக்கும் முயற்சிகள் மற்றும் அதன் செயல்பாடுகளின் கண்காட்சி, புதிதாக சீரமைக்கப்பட்ட மாநகராட்சி மைய அலுவலக பூங்காவில், செப்டம்பர் 16 முதல் 18ம்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் "சாலைகள் மக்களுக்காகவே" என்னும் தலைப்பில் மாநகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமைப்பு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரைபடங்கள் முக்கிய பங்கு பெறுகிறது.

நகரத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைப்பதற்கான புதிய உத்திகள் மற்றும் வரைமுறைகள், வளர்ந்து வரும் நகரங்களுக்கு மிகவும் தேவையான பொழுதுபோக்கு மற்றும் இளைப்பாறுவதற்கான திறந்தவெளி பொது இடங்கள் திட்டமிடுதல் போன்ற முயற்சிகள் உதாரணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. "நமது நகரமே நமது அடையாளம்". இம்முயற்சியில் தங்களது ஆதரவும் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது.

கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள் கல்வி சார் ஒருங்கிணைப்பாளர் கேர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் மற்றும் தொழில் சார் ஒருங்கிணைப்பாளர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ் திருச்சி மையம் ஆகியவை ஆகும்.

Tags:    

Similar News