திருச்சியில் மேயர் அன்பழகன் நடத்தினார் 'மக்களை தேடி மாநகராட்சி முகாம்'
திருச்சியில் மேயர் அன்பழகன் நடத்தினார் ‘மக்களை தேடி மாநகராட்சி முகாம்’ குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தினார்.;
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார். இந்த முகாமில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் தயாநிதி, மாமன்ற உறுப்பினார்கள் , மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.