திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.;

Update: 2022-02-19 06:30 GMT

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 62 ஆயிரத்து 432. இதில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 11 மணி நிலவரப்படி ஆண்கள் 1 லட்சத்து 62 ஆயிரத்து 432 பேரும், பெண்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 778 பேர் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 பேர் வாக்களித்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 29 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 2 லட்சத்து, 7 ஆயிரத்து, 719 பேர் வாக்களித்துள்ளனர்.

Tags:    

Similar News