திருச்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-19 14:15 GMT

பைல் படம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து 1 மணி நிலவரப்படி 42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவிகித வாக்கு பதிவாகி இருந்தது.

இதில் திருச்சி மாநகராட்சியில் மட்டும் மாலை 5 மணிவரை 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி பகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சி பகுதிகளில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 500 பக்கங்களில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 323 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 32 ஆயிரத்து 283, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 33 ஆயிரத்து 014 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திருச்சி மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 63 சதவிகிதம் ஆகும்.

Tags:    

Similar News