பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு

பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-07 14:15 GMT

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வீ.பாலகிருஷ்ணன், இன்று தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி டெல்லியை சேர்ந்த சுனில்குமார் பணம் பெற்று கடன் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வந்தார்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட டெல்லியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு காரைக்குடியில் கைது செய்து பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.

தனிப்படை போலீசாரின் சிறப்பான பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வீ.பாலகிருஷ்ணன் இன்று தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Tags:    

Similar News