தீப்பந்தம் சுற்றி அசத்தினார் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தீப்பந்தம் சுற்றி பார்வையாளர்களை வியக்க வைத்தார்.

Update: 2021-10-03 08:00 GMT

திருச்சியில் நடந்த தற்காப்பு கலை விழாவில் தீப்பந்தம் சுற்றி அசத்தினார் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

திருச்சி மாவட்ட  காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, தமிழர்களின் பாரம்பரியமற்றும் தற்காப்பு வீர விளையாட்டுக்கலையான சிலம்பக் கலையை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தின் முன்னோடி சிலம்ப ஆசான்கள் ஜெயக்குமார் மற்றும் பரணிதரன் ஆகியோர் தலைமையில்   நடைபெற்றது.

மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு வகையான சிலம்ப வித்தைகளை வெளிக்கொணரும் பாரம்பரியக் கலை விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பாரம்பரிய சிலம்பக் கலைகளான கம்பு சுற்றுதல், கள்ளன்கம்பு, சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம், நெடுங்கம்பு சுற்றுதல், நடுக்கம்புசுற்றுதல், சிலா வீச்சு, பொடிகுச்சி, செடிகுச்சி, சிலுவை போத்து ஆகிய சிலம்பவிளையாட்டுக் கலைகள் பாரம்பரிய விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளால்செய்து காட்டப்பட்டது.

விழாவின் சிறப்பு அம்சமாக மத்தியமண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம் மற்றும் கம்பு சுற்றுதல்வித்தைகளை செய்து காட்டி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிமண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த், சிலம்ப கம்பு சுற்றும்கலையை செய்து காட்டி அசத்தினார்.


தமிழர்களின் தற்காப்பு பாரம்பரிய கலையின்பெருமையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்,சிலம்ப கலைவித்தையினை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் பாரம்பரியக் கலை விழா நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டன. விழாவில்பங்கேற்ற குழந்தைகளுக்கு நேரு யுவகேந்திரா மையத்தின் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News