திருச்சியில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா

உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் மதிப்புறு முனைவர் பட்டம் விழா நடைபெற்றது.

Update: 2022-01-18 05:45 GMT

முனைவர் பட்டத்துடன் எல்கேஎஸ் கான்ஸ்டரக்க்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் கிருபாகரன், திருச்சி காஞ்சி மஹா பெரியவா குரு சேவா சமிதி அறங்காவலர் ரமேஷ் நாராயண ஐயர்.

உலக தமிழ் பல்கலைக்கழகமும் வின்சம் பவுண்டேஷன் திருச்சி என்ற அமைப்பும் இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா திருச்சி சத்திரம்  பஸ் நிலையம் பகுதியில் உள்ள சுவை மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீரங்கம் ஸ்வேதா வரவேற்புரை நிகழ்தினார். இதில் வின்சம் பவுன்டேஷன் தலைவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். விழாவில் உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராய் பெர்னாண்டோ கலந்து கொண்டு மதிப்புறு முனைவர் பட்டத்தை எல்கேஎஸ் கான்ஸ்டரக்க்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் கிருபாகரன், திருச்சி காஞ்சி மஹா பெரியவா குரு சேவா சமிதி அறங்காவலர் ரமேஷ் நாராயண ஐயர் ஆகியோருக்கு வழங்கி கெளரவித்தார்.

விழாவில் வின்சம் பவுன்டேஷன் செயலாளர் செந்தில்வேல்துரை, சசிஹரன், ஸ்ரீதர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வின்சம் பவுன்டேஷன் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News