அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர் கடிதம்

அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2024-02-20 17:44 GMT

எச்.எம்.கே.பி. மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி.

எச். எம். கே. பி. சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக அதிகம் வேறு பயன் அடைந்துள்ளனர்.ஆனால்  அடித்தட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை எனும் திட்டத்தை முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் சீராக செயல்படுத்தி இருந்தால் 40% நகர்ப்புற ஏழைகள் பயன் அடைந்து இருப்பார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஆகவே சென்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலம் இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்க மோடி வில்லேஜ் என்கிற பெயரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை மாற்றம் செய்து செயல்படுத்த எச்.எம். கே.பி .சார்பில் கடிதம் எழுதி இருந்தோம். இந்த திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி கருதி போர்க்கால அடிப்படையில் ஏழை எளிய நிலம் இல்லாத மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயன் அடைய வழிவகை செய்ய வேண்டும். இவர் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News