அதிகாரி மீது நடவடிக்கை கோரி அறநிலைய துறை அலுவலகம் முற்றுகை அறிவிப்பு
அதிகாரி மீது நடவடிக்கை கோரி இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிடபோவதாக தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது.;
வையாபுரி
திருச்சி மாவட்ட தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள சொர்ண பைரவர் மற்றும் பாலக்கரை, செல்வ விநாயகர் திருக்கோயில்களின் செயல் அலுவலர் அய்யம்மாள் கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு ஊழல் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். இந்து சமய அறநிலைத்துறை, இணை ஆணையர் உத்தரவின் படி, அய்யம்மாளை உடனடியாக பணியிடமாற்றம் செய்து நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.