திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான உதவி மையம்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-11 13:45 GMT

போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப் படையில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த பதிவுக்கான பொது தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில் இந்த பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது 9445465974, 996596614 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News