கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.;
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (10.11.2021) ஒருநாள் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சு.சிவராசு அறிவித்துள்ளார்.