கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.;
வங்க கடலில் புதிதாக உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு முழுவதும் பெய்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. காலையிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
பலத்த மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் 18-11-2021 இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்து உள்ளார்.