அனுமன் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை
2-ம் தேதி அனுமன் ஜெயந்தியை யொட்டி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தி அபிஷேகம் நடைபெற உள்ளது.;
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி 2-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது. முன்னதாக அன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். காலை 7 மணி முதல் தொடர்ந்து வடைமாலை சாற்றும் விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.