திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த 502 மனுக்கள்

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 502 மனுக்கள் குவிந்தது.

Update: 2021-12-14 10:07 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல், சாதிச்சான்றுகள், இதரச்சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்பட 502 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறைஅலுவலர்களுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ. பழனிகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் அம்பிகாவதி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News