திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது.;
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்ட பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம், வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை வாங்குகிறார்கள்.
அதன்படி 20-ந்தேதி காலை 10 மணிக்கு லால்குடி, காலை 11 மணிக்கு மண்ணச்சநல்லூர், மதியம் 1 மணிக்கு ஸ்ரீரங்கம், மதியம் 3 மணிக்கு திருச்சி மேற்கு உள்ளிட்ட பகுதிகளிலும், 21-ந்தேதி காலை 10 மணிக்கு திருவெ றும்பூர், காலை 11.30 மணிக்கு திருச்சி கிழக்கு, மதியம் 1 மணிக்கு மருங்காபுரி, மதியம் 3 மணிக்கு மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், 22-ந்தேதி காலை 10 மணிக்கு தொட்டியம், காலை 11.30 மணிக்கு முசிறி, மதியம் 1 மணிக்கு துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடை பெறுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.