திருச்சி அருகே இனாம்குளத்தூரில் தாத்தா பாட்டி தினம் கொண்டாட்டம்
திருச்சி அருகே இனாம்குளத்தூரில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி அருகே இனாம் குளத்தூரில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தேசிய தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. அதிகரித்துவரும் தனி குடும்பத்தால் குழந்தைகள் தாத்தா,பாட்டியின் அருமை தெரியாமல் வளருகின்றன. ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், பராமரிக்க வேண்டும்? என பெற்றோர்களை தாண்டி இவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட தாத்தா, பாட்டியிடம் அடங்கி போய்விடும். இவர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில், தைரியமான மன நிலையில் வளருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நம் வாழ்வில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரங்களில் ஒன்றான தாத்தா, பாட்டியை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் நினைவுகூறப்படுகிறது.மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தேசிய தாத்தா பாட்டி தினம் இனாம் குளத்தூரில் இன்று கொண்டாடப்பட்டது.