திருச்சியில் தாத்தாவின் தங்க சங்கிலியை திருடிய பேரன் மீது வழக்கு
திருச்சியில் தாத்தாவின் தங்க சங்கிலி திருடிய பேரன் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருச்சி ஜாபர்ஷா தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெருமாள் (வயது75) என்பவர் தங்கி உள்ளார். இவரின் அறைக்குள் அல்லிமால் தெருவை சேர்ந்த அவரது பேரன் நித்தார் மற்றும் முருகன் ஆகியோர் புகுந்து பெருமாளின் தங்கச்சங்கிலி மற்றும் மோதிரம் என 17 கிராம்தங்க ஆபரணங்களை நைசாக திருடி உள்ளனர்.
இதனை பார்த்த பெருமாள், அவர்களிடம் கேட்டபோது அவர்கள் பெருமாளை மிரட்டியுள்ளனர். இது குறித்து திருச்சி கோர்ட்டில் பெருமாள் வழக்குதொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் பேரன் உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.