திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்- கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Update: 2022-04-27 16:35 GMT

கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்களான பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, இ.ஆ.ப., தொpவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்திற்கொண்டு தமிழக அரசு நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக தேவையான நிதி ஒதுக்கீடும் அரசினால் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது.

நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம்,  ஊட்டச்சத்து இயக்ககம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), விரிவான கிராம சுகாதார திட்டத்தினை பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத் துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தொழிலாளர் தினமான 01.05.2022 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் கலந்து கொண்டு ஊராட்சிகளில் கிராம சபை நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News