திருச்சியில் பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்
திருச்சியில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பட்டதாரி வாலிபர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சுரேஷ்பாபு (வயது 30). பி.காம்., பட்டதாரியான இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பூர் செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ்பாபுவின் தந்தை சத்தியமூர்த்தி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான சுரேஷ்பாபுவை தேடி வருகிறார்.