2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்தார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-12-08 06:41 GMT

திருச்சி விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான  நிலையதத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் கவர்னர் ரவி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள விருந்தினர் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று மாலை அவர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் உயர் கல்வி துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்கிறார்கள்.

இன்று இரவு அங்கேயே தங்கும் கவர்னர் ரவி நாளை (வியாழக்கிழமை) காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். 

பின்னர் காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.

இரவு அங்கேயே தங்கும் கவர்னர் ரவி நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.


Tags:    

Similar News