அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-22 12:15 GMT
அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கும் 2021 அக்டோபர் 2-ஆம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், சுய உதவிக் குழு, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உள்ளாட்சி தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை சுமத்த கூடாது, சுகாதாரம், குடிநீர் வழங்கும் பணிகளை தனியாரிடம் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக திருச்சி மாநகர் உறையூரில் இன்று காலை திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி. ஒருங்கிணைப்பாளர் சூர்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் சுரேஷ், தலைவர் நடராஜா, துணைச் செயலாளர் ராமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் திராவிடமணி, பகுதி செயலாளர்கள் சண்முகம், ரவீந்திரன் திருச்சி பெல் ஏ.ஐ.டி.யு.சி. துணைத்தலைவர் சங்கர் கணேஷ், ஆட்டோ சங்கம் சார்பில் முருகேசன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ரஹீம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News