திருச்சியில் நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இளம்பெண் பலி

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் பலியானார்.;

Update: 2022-01-02 15:37 GMT

திருச்சி பெரியகடைவீதி, கள்ளத் தெருவை சேர்ந்த சங்கர் பாபு என்பவரின் மகள் நந்தினி (வயது 18). இவர் தனது இருசக்கர வாகனத்தில் காந்தி மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்தஅரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக நந்தினியின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்தினியை உடனடியாக திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால்அங்கு நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துபுலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அரசுப் பேருந்தை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 34)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தியஅரசு பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News