கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சியில், கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக பாலக்கரையை சேர்ந்த நவலடியான் (வயது 46) என்பவர் மீது பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை கைப்பற்றி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
விசாரணையில் நவலடியான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. நவலடியான் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நவலடியானை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் நபரிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து தொடர் சிறையில் அடைக்கப்பட்டார்.